கேளிக்கை

திரும்பி வந்துவிட்டான் சேது

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்த டாக்டர் சேதுராமனின், மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.

இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சேதுராமன் இறந்தபோது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், சஹானா என்கிற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘குட்டி சேது வந்தாச்சு’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேதுராமனின் மனைவி உமா, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Related posts

எலிகளின் சண்டை மூலம் விருதை வென்றார் சாம் ரோவ்லி [PHOTO]

wpengine

ஐகான் விருதளித்த மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

wpengine

சைப் – கரீனா தம்பதிகளின் சுட்டி தைமூர் பெயரில் Taimur cookies… (PHOTOS)

wpengine