ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

துப்பாக்கி முனைகளுக்கு இடையே பிள்ளையான் கொழும்பிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று(19) கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாளை(20) நடைபெறவுள்ள 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கென நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து அதிகூடிய பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் நேற்று(18) அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலையுடன் களத்தில் இறங்கி போராடும் அமைச்சர்கள் இவர்களா தானாம்…..

wpengine

அவுஸ்திரேலியா தலைநகரை விட்டு வெளியேரும் மக்கள் [PHOTOS]

wpengine

“I Touch Myself” சுமார் 20 இலட்சம் பேரை கவர்ந்த செரீனாவின் நிர்வாண வீடியோ…

wpengine