உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை மங்களவும், விஜயதாஸவுமே காப்பாற்றினர் – பிரதமர்

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் 30வது மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையும் சர்வதேசமும் இணைந்து உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு இணக்கமளித்துள்ளன.

இதேவேளை இந்த நல்ல செய்தியுடன் கட்சி உறுப்பினர்கள் அடுத்து வரும் உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் உள்ளூராட்சி சபை தேர்தலும் தற்போதைய விருப்புத்தெரிவு முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.

(riz)

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழப்பு

wpengine

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி தனியார் துறையிடம் – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு…

wpengine

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இல்லை – ரவி..

wpengine