ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக 4 அடி நீளமான பாம்பை வெளியே எடுக்கும் சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.

ரஷியாவின் தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்ததையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினத்தை வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி கருவியை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தினர்.

எண்டோஸ்கோபி கருவியுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் பிடித்து இழுத்தார். முழுவதும் வெளியே எடுத்த போது, 4 அடி நீள பாம்பு என்பதை அறிந்துள்ளனர்.

பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்கும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா? அந்த பெண்ணின் வயிற்றுக்குள் எவ்வளவு நேரம் பாம்பு இருந்தது? என்பன போன்ற தகவல்கள் தெரியவில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் அந்த கிராமத்தில் சகஜமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சனின் கொக்கேன் வலைவீச்சில் சிக்கிய மற்றும் தப்பியவர்கள் இவர்களா தான்…

wpengine

இந்நாட்டு வைத்தியர்களும் ISIS பயங்கரவாத அமைப்பில்… – ISIS மருத்துவர் அதிரடித் தகவல்..

wpengine

இயக்குநர் செல்வா படத்தில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு

wpengine