Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்

wpengine

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine