உள்நாட்டு செய்திகள்

உண்ணாவிரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை, தொலைபேசி பாவனை நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்(11) தொடர்கின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர் நேற்று(10) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளுள் 32 கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஞ்சிபானை இம்ரான், பொடிலெசி, வெலே சுதா, உள்ளிட்ட கைதிகள் போராட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் பேஷாக்குப் பொதி இடை நிறுத்தம் – சபையில் சஜித் சுட்டிக்காட்டு

News Editor

பொலிஸாருக்கு எதிராக இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்…

wpengine

பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது

wpengine