உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் – பானி டிவில்லியர்ஸ்

இஷாந்த் சர்மா முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் என தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் பானி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பானி டிவில்லியர்ஸ் கூறுகையில், “இந்திய அணியில் திறமையாளர்கள் பலர் உள்ளனர்.

அப்படிப்பட்ட அணியில் இஷாந்த் சர்மா தனது இமேஜ் குறித்து சிந்திக்க வேண்டும். இலங்கை சுற்றுபயணத்தின் போது இஷாந்த் சர்மா நடந்து கொண்ட விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஆனால் அவர் நன்றாகவே பந்து வீசினார். எனவே அவரது குணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

முதலில் இஷாந்த் தனது தலை முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். அவரை பார்த்தால் ஒரு விளையாட்டு வீரர் மாதிரியே தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

(riz)

 

Related posts

இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற்படையினரால் கைது..!

wpengine

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

wpengine

அரச தரப்பின் தீர்மானப்படி ஜெனீவா செல்கிறார் மங்கள சமரவீர

wpengine