உள்நாட்டு செய்திகள்

இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் எதிர்வரும் 26 ஆம் திகதி இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பாக வெளி நாட்டு அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவிருக்கின்றன.

பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் இந்த மாநாட்டில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது..

Related posts

பாதுகாப்பு உபகரண கொள்வனவு – இந்தியா கடனுதவி

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் அரசுக்கு அவதான நிலையினை சுட்டிக்காட்டி எச்சரிக்கை..

wpengine

பிணையளித்த சுங்க அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை

wpengine