Top Story 1உள்நாட்டு செய்திகள்

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை திங்களன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று(02) 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு…

wpengine

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை தோல்வி….

wpengine

நகர சபையாக மாறியது சாய்ந்தமருது

wpengine