Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிசிஆர் பரிசோதனைகளுக்கு அவசரப்பட தேவையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவசரப்படத் ​தேவையில்லை என நோயியல் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் 2 தொடக்கம் 10 நாட்களினுள்லேயே அதனை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 3,306 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் அரசாங்கம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; ஆசாத் சாலி பெருமிதம்!

wpengine

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் அதிகரிப்பு..

wpengine