உள்நாட்டு செய்திகள்

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று(29) பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் குறித்த சிசுவினை பார்வையிட்ட அனுராதபுரம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றம் (UPDATE)

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில்…

wpengine