விளையாட்டு

எதிர்வரும் போட்டிகளில் ஓஷத பெர்னாண்டோ விளையாட மாட்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரின் எதிர்வரும் போட்டிகளில் ஓஷத பெர்னாண்டோ விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகியுள்ளதனால் போட்டிகளில் கலந்துகொள்ளாது ஒரு வாரம் ஓய்விலிருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்றுமுன்தினம்(28) கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஓஷத பெர்னாண்டா துடுப்பெடுத்தாடி வரும் வேளையில் உபாதைக்குள்ளானர்.

ஓஷத பெர்னாண்டோவின் பரிசோதனை அறிக்கையில் கணுக்காலை சுற்றியுள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

ஐசிசி அதியுச்ச கௌரவ விருதுகள் அறிவிப்பு… ரிக்கி பொண்டிங் உள்ளீர்ப்பு…

wpengine

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவுக்கும் இடையில் விரிசல்..

wpengine

சாம்பியன்ஸ் தொடரிலிருந்து இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் கிரிஸ் வோக்ஸ் வெளியேற்றம்..

wpengine