உள்நாட்டு செய்திகள்

கொவிட் நிலைமைக்கு அமைவாக எதிர்கால தீர்மானங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் 22ஆம், 23ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அல்லது தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 22ஆம், 23ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள கொவிட் நிலைமைக்கு அமைவாக தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

தப்பிச் சென்ற மஹர சிறைச்சாலை கைதி கைது

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

wpengine