உள்நாட்டு செய்திகள்

மின்சார பட்டியல் SMS ஊடாக

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (SMS) அல்லது மின்னஞ்சல் e-mail ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிநுட்பத்தின் கீழ், பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீற்றர் ஊடாக அலுவலகத்திலிருந்தே மின் கட்டணத்தை தயார் செய்ய முடியுமென, மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மின்மானி வாசிப்போர் அல்லது மின்பட்டியலை விநியோகிப்பவர்கள் தொழில்வாய்ப்பை இழக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அடுத்த வருடத்திலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் இரகசியங்களை அம்பலப்படுத்திய உறவினர்!

wpengine

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் இவ்வாரத்தினுள்…

wpengine

சைட்டம் எதிர்ப்புக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த தயார்..- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..

wpengine