உள்நாட்டு செய்திகள்

அரசியல்வாதிகள் வூஸூ தற்காப்புக்கலை கற்பது அவசியம் – அமைச்சர் தலதா

அரசியல்வாதிகள் வூஸூ என்னும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது அவசியமானது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இத்தற்காப்பு கலையின் மூலம் உள ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க முடியும். இதன் ஊடாக வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இளைஞர் யுவதிகள் இவ்வாறான தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் சமூகத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

அவர்களின் எதிர்கால பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.

கலவான காமினி வித்தியாலயத்தில் நேற்று(4) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine

பால்மா விலை அதிகரிப்பு

Azeem Kilabdeen

பதுளை கோர விபத்து : லொறியின் சாரதி கைது

wpengine