உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து பலியெடுக்கும் எக்ஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாவைவிட மோசமான உயிர் கொல்லியான எக்ஸ் நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி உள்ளதாகவும் இது விரைவில் உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது.

இந்த கொடிய வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக உள்ளது. இந்த வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவியது. 2021 பிறந்த பின்னரும் இது முடிந்தபாடில்லை. இதனால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க, எக்ஸ் எனப்படும் ஒரு நோய் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலை காடுகளில் பரவி வருவதாக கூறப்படுகிறது. அது போல் இது உலக நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கொரோனாவை விட அதிக உயிர் பலியை ஏற்படுத்தும் என பெல்சியம் நாட்டு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் தாக்கத்திலிருந்து ஏற்படும் அறிகுறிகள் போலவே தற்போது எக்ஸ் நோய் அறிகுறிகள் இருக்கும். காங்கோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எக்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார். எக்ஸ் என்றால் எதிர்பாராதது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஈரான் தலைநகரில் நிலநடுக்கம்…

wpengine

பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி வழங்குகின்றது – பாகிஸ்தான் அமைச்சர்

wpengine

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி

wpengine