கேளிக்கை

பிரபல ஹாலிவுட் நடிகைக்கு ஆறாவது திருமணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006 ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007 ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014 ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர். கடந்தாண்டு ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸ் (வயது 75) என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 12 நாட்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், தனது பாடிகார்ட் டான் ஹேஹர்ஸ்டை இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது இரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பமீலாவின் ஆறாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியினை சித்திரவதை செய்வது போன்ற விளையாட்டொன்று இணையத்தளத்தில்…

wpengine

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக பிரபல நடிகை…

wpengine

விஜய்யின் 65ஆவது படத்தில் மடோனா செபாஸ்டியன்?

wpengine