உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.96 கோடியை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.29 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts

பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பலி

wpengine

ஹமாஸ் தீவிரவாதிகளை அழித்து, ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை – இஸ்ரேல் பிரதமர்..!

wpengine

சூடான் ஹெலிகாப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி

wpengine