ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிர்வாணக் குளியலில் ஈடுபட்டவருக்கு பிணை (update)

ஹிக்கடுவ கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, நீதவான் கேசர சமரதிவாகர, சுற்றுலாப் பிரயாணியை 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சுற்றுலாப் பிரயாணி, தினமும் காலை கடலில் நிர்வாணமாக நீராடுவதால், குறித்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறுவர்களுக்கும் பெரும் தொந்தராவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவர், கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதியிலிருது தங்களது விடுதியில் தங்கியிருப்பதாக, விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் அவசரப்பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

இங்கிலாந்தில் சிறு வயது காதலியை மரணத்திற்கு முன்பு கரம் பிடிக்க ஆசைப்பட்ட வாலிபர்

wpengine

மைத்திரியின் facebook விருப்புகள் மளமளவென சரிந்தது… அரசியல் குரோதங்களா..

wpengine

பல்வேறு கோணங்களில் பெண்களை படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

wpengine