உலக செய்திகள்

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.35 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.91 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.18 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91 ஆயிரத்து 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் 520,785 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

wpengine

இந்தியா தேவையற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது – பாகிஸ்தான் எச்சரிக்கை…

wpengine

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு…

wpengine