உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு நாரங்கல பகுதி  தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பதுளை – நாரங்கல மலை பகுதிக்கு மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு வேளையில் தங்கியிருந்து மேற்கொள்ளும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர் இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்?

News Editor

சூடான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்..

wpengine