விளையாட்டு

BPL தொடரில் முதன்முறையாக களமிறங்கவுள்ள 02 வீரர்கள்

(FASTGOSSIP|COLOMBO) – உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதன் முறையாக பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் மற்றும் உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஆகியோர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) முறையே டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் விதிமுறைப்படி, வீரர்கள் வரைவில் இடம்பெறாத 2 வெளிநாட்டு வீரர்களை நேரடியாக தங்களது அணிகளில் ஒப்பந்தம் செய்வதன் மூலம் குறித்த இரண்டு வீரர்களையும், டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகள் இணைத்துள்ளன.

Related posts

விமர்சனங்களால் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருப்பதாக தெரிவித்த மேத்யூஸ் தலைமைப் பதவி இராஜினாமா..

wpengine

கற்றது போதும் இது சாதிக்கும் நேரம் – கோலி

wpengine

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை முன்னிலையில் தடுமாற்றம்…

wpengine