உள்நாட்டு செய்திகள்

CEYPETCO, IOC : எரிபொருள் விலைகள் அதிகரிப்பு- பிற்பகல் 2 மணிக்குப் பின் அமுல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருக்கின்றன.

இரண்டு நிறுவனங்களும் சமமான விலையிலேயே எரிபொருள்களை அதிகரித்திருக்கின்றன
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்திருக்கின்றன.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 470 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

Related posts

சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி

wpengine

உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிக்க கவனம்

wpengine

SLPL மீண்டும் களத்திற்கு வரும் சாத்தியம்

wpengine