உள்நாட்டு செய்திகள்வணிகம்

ETI – சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ETI நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் குறித்த இரு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு 06 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IPL 2016 முதன் முறையாய் கிண்ணத்தை சுவீகரித்தது ஐதராபாத் அணி

wpengine

கெஹெலிய – ஜயம்பதி விடுதலை

wpengine

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

wpengine