ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

FaceApp குறித்து புதிய சர்ச்சை

(FASTNEWS|COLOMBO) – சமூக இணையத்தளங்களில் புதிதாக உருவாக்கப்பட்டு வைரலாகி வருகின்றன FaceApp என்ற செயலி மோகத்தின் காரணமாக அதனை பயன்படுத்துவோரின் தரவுகள் காணாமல் ஆக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

உங்களது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படங்களையும்; இந்த செயலியை தயாரித்த நபரிடம் தரவேற்றம் செய்வது தொடர்பில் பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை தயாரித்த சிலர் தனிப்பட்ட கொள்கைக்கு அப்பால் இதனை பயன்படுத்தும் பயனாளிகளினால் தரவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது தொடர்பான தகவலை குறிப்பிடுவதற்கும் தவறியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உங்களுடைய தனிப்பட்ட தன்மையை பாதுகாப்பதற்கு இவ்வாறான செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

தமிழ் கலாச்சரத்திற்கு முன்னுரிமை வழங்கி தீபாவளி விளக்கேற்றிய ட்ரம்ப்….. (Photos)

wpengine

ஜனாதிபதியிடம் குமார வெல்கம தெரிவித்த அதிரடி கருத்தால் பரபரப்பு!

wpengine

மனித முடியை விட சிறிய தேசியக் கொடி – கனடா விஞ்ஞானிகள் சாதனை

wpengine