ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

facebook பாவனையாளர்கள் தொடர்பில் அரசு விசேட கண்காணிப்பு..

(FASTGOSSIP – COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகநூல் (Facebook) கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஷாவின் ஆசை

wpengine

இரண்டு பெண்களை திருமணம் செய்பவர்களை தேடி வரும் அதிஷ்டம்

wpengine

எதிர்பார்ப்புகளை கலைத்து விடைபெற்றார் கிரிஸ் கெய்ஸ்

wpengine