உள்நாட்டு செய்திகள்

GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை மேலும் நீடிக்காதிருப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அவ்வாறான 16 பேரூந்துகள் தொடர்பில் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லமாரச்சி தெரிவித்துள்ளார்.

பேரூந்துகள் எப்பகுதியில் பயணிக்கின்றன என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எவ்வளவு கிலோமீற்றர் தூரம் பேரூந்து பயணித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக GPS தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேரூந்து கட்டண திருத்தத்திற்கு மேலதிகமாக  அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் அறிவிக்க தொ.இலக்கம்….

wpengine

எரிபொருள் விலை சூத்திரம் குறித்து நிதியமைச்சின் அறிவிப்பு

wpengine

பிரதமர் ரணில் விக்கரமசிங்க கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடல்..

wpengine