ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ISIS இனது அடுத்த இலக்கு உலகக் கிண்ணத் தொடர்…

ரஷ்யாவில் அடுத்த வரு­டம் நடை­பெ­ற­வுள்ள கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொடரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முக்­கிய இலக்­கா­கக் கொண்­டுள்­ளது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் பல­வும் செய்தி வெளி­யிட்­டன.

ஈராக், சிரிய நாடு­க­ளின் பெரும் பகு­தி­க­ளைக் கைப்­பற்றி அவற்றை ஒரு தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு.

அந்த அமைப்­பின் பிடி­யில் இருந்து இந்த வரு­டத்­தின் மத்­திய பகு­தி­யில் மீண்­டது ஈராக். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதிக்கம் பெரியளவில் உள்ள ஒரே நாடாக தற்போது சிரியாவாக இருந்தாலும்,

அதன் ரக்கா நகரமும் அண்மையில் மீட்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது என பல பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆர்ஜென்ரீனா அணியின் பிரபல நட்சத்திர தலைவர் மெஸ்ஸியின் கண்ணில் இருந்து இரத்தம் வடிவது போன்றதொரு ஒளிப்படத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.

இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்கு மெஸ்ஸியா அல்லது அடுத்த உலகக் கிண்ணத் தொடரா என பரபரப்புக்கள் உச்சம் தொட்டுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலமடங்கு அதிகரித்துள்ளது ரஷ்யா.

அதேபோல் மெஸ்ஸிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளும் இரட்டிப்புச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

 

(rizmira)

Related posts

ஜனாதிபதி போட்டியிட்ட கட்சியின் தலைவரின் கைதும்.. தாய்வான் வங்கி ஊழலும்.. – விசாரணைகளுக்கு தாய்வானிலிருந்து விசேட குழு..

wpengine

பணத்தில் அஜித் – புகழில் விஜய்

wpengine

ரணிலின் அதிரடி தீர்மானம் ; பதவியை பறிக்க நடவடிக்கை

wpengine