உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்

பாரிய நிதிமுறைகேடுகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இன்று சமுகமளிக்குமாறு ஐடிஎன்(ITN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்டணம் செலுத்தப்படாமல் ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் அவர் இதன்போது விசாரணை செய்யப்படவுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் ஐடிஎன்’னில் 89.9 மில்லியன் ரூபாய்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பட்டன. எனினும் அதற்கான கட்டணங்கள் இதுவரை செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று அநுர சிறிவர்த்தன விசாரணை செய்யப்படவிருந்த போதும் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

(riz)

Related posts

ஊவா மாகாண முதலமைச்சர் சற்றுமுன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான சேவையின் குறியீட்டினை பதிகிறது.

wpengine

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine