உள்நாட்டு செய்திகள்

JR’இன் பேரன் பிரதீப் ஜயவர்தன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தீர்மானம்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடமிருந்து மொட்டு சின்னத்தில் போட்டியிட தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆராய்ந்து பதில் தருவதாக பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டில் எவ்வித திருப்தியுமில்லை எனவும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை…

wpengine

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் (safety locker) இருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயமாக மறைந்தது _ பொலிஸார் விசாரணை

News Editor

‘யுனிசெப்’ இனது நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம்..

wpengine