உள்நாட்டு செய்திகள்வணிகம்

Sapphire கொள்வனவில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி – இரத்தினக்கல் எனக்கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster, இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

510 கிலோகிராம் எடை கொண்ட Sapphire Cluster என்றழைக்கப்படும் இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது;

இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

Related posts

கொவிட் பாதிப்பு – 40 ஆயிரத்தை கடந்தது

wpengine

பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பாய் இந்தியன்ஸ் 03 விக்கெட்டுகளால் வெற்றி…

wpengine

UPDATE – சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்து அரசினால் தீர்மானமிக்கதோர் அறிக்கை..

wpengine