உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UNHRC பங்கேற்கும் இலங்கை குழுவினர் இன்று ஜெனீவா விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று ஜெனீவா செல்லவுள்ளது.

இந்த தூதுக்குழுவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி தரப்பினரின் தலையீடு இந்த அமர்வுகளில் நிராகரிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்படும் என் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எதிர்வரும் 12ஆம் திகதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி உரையாற்றவுள்ளார்.

Related posts

சகல மதுபானசாலைகளுக்கும் 10ம் திகதி பூட்டு…

wpengine

இன்று காலை கொழும்பினை அண்டிய பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்கு..

wpengine

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை

wpengine