உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

Update – இராணுவ முகாமின் திடீரென தீ பரவல் – கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதையானது கொஸ்கமயிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளை வெளியேறுமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு

wpengine

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை…

wpengine

அமித் வீரசிங்க உட்பட 27 பேர் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine