உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பாதையில் டயர்கள் எரிப்பு..

பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 6 பேரை நேற்று(10) இரவு 11.00 மணியளவில் தங்கல்ல சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் போது டயர்களை எரித்து வீதிகளை மறைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதலால் குறித்த வீதியிலான போக்குவரத்து தடைப்பட்ட போதிலும், தரப்பினர் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக மேலும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட 6 பேர், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

………….. Update (10-10-2017 8:47 PM)

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் கைது..

பராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி. வீ ஷானக, பிரசன்ன ரணவீர மற்றும் உபாலி கொடிகார, சம்பத் அதுகோரல இராணுவ அமைப்பின் இணைப்பாளர் அஜித் பிரசன்ன உட்பட 6 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சென்றுள்ள போது இன்று(10) அவர்கள் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

IPL 2017 – இலங்கை அணி வீரர்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள்.. [முழு விவரம்]

wpengine

நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…

wpengine

தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டதால் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் – சம்பந்தன்..

wpengine